குளவிக்கொட்டு காரணமாக மூடப்பட்டது சிகிரியா

குளவி தாக்குதல் காரணமாக சிகிரியா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் உட்பட 25 சுற்றுலாப் பயணிகள் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் குளவி தாக்குதலுக்கு உள்ளான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 8 பேரைத் தவிர ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்