
குளவிக்கொட்டுக்கு இலக்காகி நேர்ந்த சோகம்
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் 3 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
