
குளத்திலிருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்பு
ஹொரண தொம்பதொட இராணுவ முகாமின் குளத்தில் இருந்து இராணுவ வீரரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அட்டாலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 7ஆவது இராணுவ ஆயுதப் படையணியின் சிப்பாய் டபிள்யூ.எம்.டி.லக்ஷ்மன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிப்பாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடற் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை எனவும், தேடப்பட்ட போதும் காணப்படவில்லை எனவும், இது தொடர்பில் சிப்பாயின் வீட்டினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலம் மீதான விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
