குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக நீரில்மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்