குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாட்டின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ளது
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது நாட்டின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ளதுடன், படிப்படியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, வடக்கு, வடமத்திய, மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்