குர்ஆன் எரிப்பு கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள்!

அரபு நாடுகளில் பக்ரீத் பண்டிகை நேற்று செவ்வாய்க்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தை கொந்தளிக்க செய்யும்படியான ஒரு நிகழ்வு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அரங்கேறி உள்ளது.

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் வெளியே, முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் பக்கங்களை ஒரு நபர் கிழித்து போட்டதுடன் அவற்றை தீயிட்டு எரிக்கவும் செய்தார்.

சம்பவம் தொடர்பாக, 37 வயதான வாலிபர் ஒருவரை ஸ்வீடன் பொலிசார் கைது செய்துள்ளனர். சல்வான் மோமிகா என்ற அந்த நபர், பல ஆண்டுகளுக்கு முன் ஈராக்கில் இருந்து தப்பித்து ஸ்வீடனுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

“கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்த தான் விரும்பினேன்” என்று குர்ஆனை எரித்த தன் செயலுக்கு அவர் நியாயம் கற்பித்துள்ளார்.

“இது எங்களின் ஜனநாயக உரிமை. இவ்வாறு செய்யக்கூடாது என்று யாராவது சொன்னால், அவர்களின் கருத்து ஜனநாயகத்துக்கு ஊறுவிளைக்க கூடியது” என்று இந்த நபர் கூறியிருக்கிறார்.

குர்ஆனை எரித்து கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்திய இவரின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு ஸ்வீடன் பொலிசாருக்கு இருக்கிறது.

குர்ஆனை எரிக்கும் போராட்டத்திற்கு இவர் பொலிசாரிடம் அனுமதி கேட்டதுடன், ஸ்வீடனில் குர்ஆனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார் எனவும் ஸ்வீடன் அரசு ஊடகமான டச்சுஸ் வெல் (Deutsche Welle) செய்தி வெளியிட்டிருந்தது.

குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கன் ஃபீடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இவர் ‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்துக்கு எதிரான இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது’ என்று அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

“ஒரு மதத்தின் புனித நூல் எரிக்கப்பட்டுள்ளமை மிகவும் வருத்தம் அளிப்பதாகவும்இ இந்தச் சம்பவத்தை ஏற்றுக் கொள்ள இயலாது” எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவுத்துறை இணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஸ்வீடன் நிகழ்வுக்கு அமெரிக்காவின் கண்டனத்தை பதிவு செய்தார்.

இதனிடையே, குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, ஸ்வீடனில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டுஇ ஸ்வீடனுக்கான தமது நாட்டு தூதரை காலவரையின்றி திரும்பப் பெறுவதாக மொரோக்கோ அறிவித்துள்ளது. அத்துடன்இ தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் படியும் ஸ்வீடன் தூதருக்குஇ அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அழைப்பானை அனுப்பி உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்