குருநாகல் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து

குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை பொலிஸார் மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனமும் முன்னெடுக்கவுள்ளது.

இந்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலையை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தீ விபத்து சம்பவத்தால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீடுகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க