குருநகர் கடற்பரப்பில் 183 கிலோ கேரள கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றையதினம் புதன் கிழமை 183 கிலோ கேரளக் கஞ்சாவுடன் படகு ஒன்றும் மீட்கப்பட்டது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை இன்று அதிகாலை 3.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

92 பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொதிகள் என்பன யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.