குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தில் கழக தலைவர் நா.பிரியதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்ட்டார் விளையாட்டு கழகம் முதலிடத்தையும் , குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது வெற்றியீட்டிய அணிகளுக்கு கேடயங்களும் , பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

