
குருக்கள்மடம் செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் எரிக்கப்பட்ட சொக்கப்பனை!
குருக்கள்மடம் செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா பக்தி பூர்வமாக நடைபெற்றது
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் நேற்று புதன்கிழமை திருக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது.
விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, உள்வீதி வலம் வந்து , சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பிரம்மா விஷ்ணு அடி முடி தேடிய புராண இதிகாச கதைகளுடன் தொடர்புடையதாக, வருடா வருடம் கார்த்திகைதிருவிழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பூஜை வழிபாடுகள் யாவும் ஆலயம் பிரதம குரு சிவ ஸ்ரீ நவரெத்தினமுரசொலிமாறன் குருக்கள் தலைமையிலான குருமார் குழுவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
