குரங்கு பறித்த தேங்காய்: ஒருவர் பலி

கேகாலை, புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் தேங்காய் தலையில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஏ.ஜி.ஜயசேன என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய்கள் விழுந்திருப்பதை அவதானித்துள்ள நிலையில் அதனை  சேகரித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது தென்னை மரத்திலிருந்த குரங்கு ஒன்று தேங்காய் பறித்துக்கொண்டிருந்துள்ள நிலையில் குரங்கு பறித்த தேங்காய் உயிரிழந்தவரின் தலையில் விழுந்துள்ளது.

இதனையடுத்து காயமடைந்தவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புலத்கொஹுபிட்டிய பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்