குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யமாட்டோம்: அரசாங்கம் உறுதி!

இலங்கையில் இருந்து சீனாவிற்கு செங்குரங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.

குறித்த குரங்குகள் இலங்கைக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு சிறு குரங்கினமாகும். சிங்களத்தில் இது ரிளவா என அழைக்கப்படுகிறது. இதன் தலையில் தொப்பி போன்ற அமைப்பில் தலைமுடிகள் செறிந்து வடிவமைந்திருக்கும். இவ்வாறான சிறப்பு வாய்ந்த குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என குறித்த திணைக்களம் உறுதியளித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்