கும்பமேளா நடைபெறும் பகுதியில் தீ விபத்து!

கும்பமேளா நடைபெறும் பகுதியில் இன்று காலை தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது.

கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகிய கும்பமேளா எதிர்வரும் 26ஆம் திகதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் உள்ள ஒரு முகாமில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

எவ்வாறாயினும் வேகமாக செயற்பட்டதன் விளைவாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பும் இப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.