
குமார வெல்கம மீதான தாக்குதல் தொடர்பில் இருவர் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து கடந்த 9ஆம் திகதி தாக்குதலுக்குள்ளானார்.
மேலும், அவர் பயணித்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கொட்டாவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
