குமாரசம்பவம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

 

குமாரசம்பவம் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய குமரன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் .

குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 12-ம் திகதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.