குப்பையை எரித்த தாயின் நிலை

யாழ்ப்பாணத்தில் வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி, சங்கத்தானையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி என்ற 37 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 7 ஆம் திகதி பிற்பகல் 5 மணி அளவில் வீட்டில் இருந்து குப்பையினை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது. காற்று வீசும் திசையில் நின்று இவ்வாறு குப்பைக்கு தீ மூட்டியமையே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதை அடுத்து காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசரணைகளை மேற்கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்