குதிரைவாலி அரிசியின் நன்மைகள்

குதிரைவாலி அரிசியின் நன்மைகள்

குதிரைவாலி அரிசியின் நன்மைகள்

💢பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அரிசி, கோதுமையை விட, சிறுதானியங்களை தான் அதிகம் சாப்பிட்டார்கள். சிறுதானியங்களை சாப்பிட்டதாலோ என்னவோ அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதைப் புரிந்து கொண்டு தற்போது சிறுதானியங்களை நிறைய பேர் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். சிறுதானியங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் குதிரைவாலி அரிசி.

💢இந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, ஸ்டார்ச், கால்சியம், கொழுப்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த வகை சிறுதானியத்தை உட்கொண்டு வந்தால், பலவிதமான நன்மைகளைப் பெறலாம். அந்தவகையில் குதிரைவாலியை தினசரி உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

🔻குதிரைவாலியில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு மற்றும் இது மெதுவாக ஜீரணமாவதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுப் பொருளாகும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி உணவில் கோதுமைக்கு பதிலாக குதிரைவாலியை சேர்த்து வருவது  நல்லது.

🔻இதய நோய் இருப்பவர்கள் குதிரைவாலியை தினமும் சமைத்து உட்கொள்வது நல்லது. ஏனெனில் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் மற்றும் இதயத்துடிப்பும் சிறப்பாக இருக்கும்.

🔻குதிரைவாலியில் மற்ற தானியங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் எளிதில் செரிமானமாகக்கூடிய புரோட்டீன்கள் அதிகளவில் உள்ளன. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது ஒரு அற்புதமான உணவுப் பொருள் மற்றும் இது உடலுக்கு நல்ல ஆற்றலையும் வழங்கும்.

🔻குதிரைவாலி அரிசியில் பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகளவில் உள்ளன. இந்த குதிரைவாலியை சமைக்கும் போது, அவை கால்சியம் பாஸ்பேட்டாக மாறி, எலும்புகளை வலுவாக்குகின்றன. எனவே எலும்பு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் குதிரைவாலியை சாப்பிடுவது நல்லது.

🔻இன்று பலரும் இரத்தசோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த இரத்தசோகை பிரச்சனையைக் கொண்டவர்கள் குதிரைவாலி அரிசியை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து, புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளன. இவை இரத்த சோகையைத் தடுப்பதோடு, உடலை வலுவாகவும் வைத்துக் கொள்ளும்.

🔻குதிரைவாலியில் கரையக்கூடிய மற்றும் கரையாத டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. சொல்லப்போனால் மற்ற தானியங்கள் மற்றும் சிறுதானியங்களை விட குதிரைவாலியில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. எனவே இதை தினசரி உணவில் சேர்க்கும் போது, அது மலச்சிக்கல், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று பிடிப்பு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.

🔻குதிரைவாலியில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த பீட்டா கரோட்டீன் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். ஆகவே கண் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் மற்றும் கண் பிரச்சனைகளைக் கொண்டவர்கள் குதிரைவாலியை தினமும் உட்கொள்வது நல்லது.

குதிரைவாலி அரிசியின் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்