குதிகால் வெடிப்பைப் போக்க இயற்கை வழிகள்

குதிகால் வெடிப்பைப் போக்க இயற்கை வழிகள்

குதிகால் வெடிப்பைப் போக்க இயற்கை வழிகள்

💦உடலிலேயே பாதங்கள் தான் அதிக வறட்சி அடையும் பகுதி. ஏனெனில் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. எனவே உடலின் நாம் எந்த பகுதிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கிறோமோ இல்லையோ, பாதங்களுக்கு தவறாமல் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதங்களில் வலிமிக்க வெடிப்புக்களை சந்திக்க நேரிடும்.

💦உங்கள் குதிகாலில் வெடிப்புக்கள் அதிகமாக இருந்தால், அந்த வெடிப்புக்கள் மிகவும் வலிமிக்கதாக இருந்தால், அதைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளை தினமும் பின்பற்றி வந்தால், குதிகால் வெடிப்பு விரைவில் காணாமல் போய்விடும். அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

🔶தேங்காய் எண்ணெய் சரும வறட்சியை சரிசெய்யும் அற்புதமான எண்ணெய். அதுவும் குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி வந்தால், சீக்கிரம் பாத வறட்சியும், குதிகால் வெடிப்பும் நீங்கிவிடும்.

🔶வாழைப்பழம் குதிகால் வெடிப்பைப் போக்கக்கூடியது. எனவே இனிமேல் வாழைப்பழம் சாப்பிடும் போது, சிறிது வாழைப்பழத்தை பாதங்களில் தேய்த்துக் கொள்ளுங்கள். பின் நன்கு காய்ந்த பின்பு நீரால் பாதங்களைக் கழுவுங்கள். இப்படி செய்வதால்  குதிகால் வெடிப்புக்களை எளிதில் போக்கலாம்.

🔶வாழைப்பழத்திற்கு அடுத்தப்படியாக குதிகால் வெடிப்பைப் போக்க உதவும் பழம் தான் பப்பாளி. நீங்கள் சாப்பிடும் போது சிறிது பப்பாளியை எடுத்து மசித்து, அதை பாதிக்கப்பட்ட குதிகால் பகுதியில் தடவி ஊற வைத்து நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் குதிகால் வெடிப்பு நீங்கிவிடும்.

🔶தேனில் இயற்கையாகவே ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. அதோடு இது குதிகால் வெடிப்பிற்கான மிகச்சிறந்த மாய்சுரைசரும் கூட. அதற்கு தேனை வெடிப்பு உள்ள குதிகாலில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்வதோடு, பாதங்களும் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.

🔶உங்கள் பாதங்களில் பூஞ்சை தொற்றுகளால் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தால், அதை சரிசெய்யும் அற்புதமான ஓர் வழி வினிகர் நீரில் பாதங்களை ஊற வைப்பது தான். இதனால் பாதங்களில் உள்ள பூஞ்சைகள் அழிக்கப்படுவதோடு, விரைவில் குதிகால் வெடிப்புகளும் மறையும்.

🔶வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பாத வெடிப்பு நீங்கும்.

🔶விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும்.

🔶மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர பாத வெடிப்பு குணமாகும்.

🔶கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

குதிகால் வெடிப்பைப் போக்க இயற்கை வழிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்