குடு சலிந்துவின் பிரதான சகாவின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் பிரதான சகாவான பியும் ஹஸ்திக எனும் பியூமா எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவரான சலிது மல்ஷிதா என்ற குடு சலிந்துவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்