குடும்ப தகராறில் மனைவி கொலை : கணவன் கைது

எல்பிட்டிய, திவித்துர வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை காலை பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திவித்துர வத்த பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான யோவான் ரெனிதா மேரி (வயது – 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் கணவர் கத்தியுடன் வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க