குடும்ப தகராறில் பரிதாபமாக பறிபோன மனைவியின் உயிர்

-பதுளை நிருபர்-

நுவரெலியாவில் மனைவியைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெலிமடை டயரப பகுதியில் இன்று திங்கட்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிராஹவத்தை, மேல் பிரிவு டயரபா தோட்ட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே நேற்று மாலை ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.