குடும்பத் தகராறு காரணமாக அண்ணன் தங்கை அடித்துக் கொலை

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவகத்தேகம-முல்லேகம பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது

இதன்போது, மனைவி மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

32 வயதுடைய நபர் மற்றும் அவரது 25 வயது சகோதரி ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் சந்தேக நபரான கணவன். காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.