
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும்
இன்று திங்கட்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
எனினும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரதான காரியலயமும் ஏனைய பிராந்திய அலுவலகங்களும் வழமை போன்று இன்று திறக்கப்படும் என குடிவரவுஇ குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் சரத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
