குடிபோதையில் கைகலப்பு : போதையில் காதை கடித்து துப்பிய நபர்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- மஹதிவுல்வெவ பகுதியில் மது போதையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இக்கைலப்பில் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

இருவரும் வழக்கு ஒன்றிற்கு திருகோணமலை நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வரும்போது ஒன்றாக மது அருந்துவிட்டு வந்ததாகவும், இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் தெரிய வருகின்றது.

இக்கைகலப்பினால் எம்.அமில (35 வயது) என்பவருடைய காதை கடித்து காயப்படுத்தியதுடன், மற்றவருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மதுபோதையில் இருப்பதாகவும் கடமை நேர வைத்திய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.