
குஜராத் டைட்டன்ஸ் அணியில் தசுன் சானக்க
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேறிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் க்ளென் பிலிப்ஸிற்கு பதிலாக தசுன் சானக்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியின் போது பிலிப்ஸிற்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறினார்.
தசுன் சானக்க கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
அந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 75 இலட்ச இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
இந்தநிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள தசுன் சானக்க 26 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், அவர் இலங்கைக்காக 102 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 1,456 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்