
குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டி
-மூதூர் நிருபர்-
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் நாவற்சோலையை சேர்ந்த நாவலர் அணி வெற்றியீட்டியது.இவ் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்துச் சுற்றுப்போட்டியில் சலப்பையாற்றை சேர்ந்த அதிரடி அணியினரும் நாவற்சோலையை சேர்ந்த நாவலர் அணியினரும், இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய நிலையில் நாவற்சோலை நாவலர் அணியினர் வெற்றியீட்டினர்.
கடந்த 16 மற்றும் 17 ஆகிய தினங்களில் நாவற்சோலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டிகளிற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் கலந்துகொண்டு வெற்றிக்கோப்பையை வழங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஜெயகாந்தன் மற்றும் நிமலகாசன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




