-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று புதன்கிழமை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
பிரதேச சபை தவிசாளராக செயற்பட்டு வந்த ஏ.முபாரக் தலைமையில் சபை அமர்வு ஒன்று கூடிய போது பாதீட்டுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த 05 உறுப்பினர்களும், இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவரும், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த இருவரும், சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவரும் ஆதரவு தெரிவித்த நிலையில், பாதீடு நிறைவேற்றப்பட்டது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 04, இலங்கை தமிழரசு கட்சி 03, தேசிய மக்கள் சக்தி 01 என 08 உறுப்பினர்கள் இதன் போது வெளிநடப்பு செய்து சபையை விட்டு வெளியேறினர்.


