
குச்சவெளிக்கு 06 மில்லியன் ரூபா பெறுமதியான பொதிகள்
திருக்கோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகள் நேற்று வெள்ளிக்கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் Midwest Heavy Sands நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது சுமார் 700 குடும்பங்களுக்கான 6 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்பீமன, குச்சவெளி பிரதேச செயலாளர், குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் பின்னர் மக்களுக்கான பாரிய நிவாரண உதவி இன்றைய தினம் முதல் முறையாக வழங்கி வைக்கப்பட்டது.

