
கீரி சம்பா அரிசி உற்பத்தியை மேலும் விரிவுப்படுத்த வேண்டும்
பொதுமக்களுக்கு தேவையான அளவு கீரி சம்பா அரிசியை வழங்க வேண்டுமாயின் அதன் உற்பத்தியை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று சனிக்கிழமை பயிர்ச்செய்கை நிலங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
