
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் களுதாவளை ம.வி தேசிய பாடசாலை முதலாம் இடம்
களுதாவளை நிருபர் – செல்லத்துரை ஆனந் –
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த 07.09.2024-11.09.2024 வரை 5 நாட்களாக நடைபெற்று முடிந்த மாகாண மட்ட போட்டிகளில் முடிவில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை ம.வி தேசிய பாடசாலை 12 தங்கப்பதக்கம் 05 வெள்ளிப்பதக்கம் 09 வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 26 நிகழ்வுகளில் வெற்றிபெற்று 95 புள்ளிகளுடன் கிழக்கு மாகாணத்தில் அதிக தங்கப்பதக்கங்களையும் அதிக புள்ளிகளையும் பெற்று மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற பாடசாலையாக சாதித்துள்ளது.
இப்போட்டிகளில் முடிவில் 31 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆண்கள் பிரிவில் 51 புள்ளிகளையும் , பெண்கள் பிரிவில் 44 புள்ளிகளையும் பெற்றுள்ளது. அதே போல் பெண்கள் அஞ்சல் பிரிவில் 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இம்முறை 06 புதிய மாகாண சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. மேலும் நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் கூடைப்பந்தாட்டம் , 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் கூடைப்பந்தாட்டம் மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் எறிபந்து போட்டிகளில் மாகாணத்தில் வெற்றிபெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த பல வருடங்களாக கிழக்கு மாகாண விளையாட்டு போட்டிகளில் முதல்நிலை பாடசாலையாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
