
கிழக்கு மாகாண மட்ட இளைஞர் விருதுப் போட்டி
மகளிர் சிறுவர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த, கிழக்கு மாகாண மட்ட இளைஞர் விருதும் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜெகத் லியனகே கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனாப் ஏ முபாறர் அலி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி நிஸாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், மன்றத்தின் உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
