கிழக்கு மாகாண புதிய ஆளுநர் திருகோணமலையில் விஷேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்
-திருகோணமலை நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலையிலுள்ள புகழ்பெற்ற சர்வமத ஆலயங்களுக்கு சென்று இன்று வியாழக்கிழமை விஷேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிலையில், கடமையை பொறுப்பேற்க முன்னரே இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்து திருகோணேஸ்வரர் ஆலயம், வில்கம் விகாரை மற்றும் கிறிஸ்தவ ஆலயம், பள்ளி வாசல் போன்ற இடங்களுக்கு சென்று விசேட வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இருந்தபோதிலும் ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்க முற்பட்டிருந்த போதிலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்