கிழக்கு மாகாண பாடசாலை மட்ட கராத்தே போட்டி

 

கிழக்கு மாகாண பாடசாலை மட்ட காராத்தே போட்டியில் இம்முறை மிக கூடுதலான பெண்கள் தரப்பில் பதக்கங்களைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டஎக்ஸ்ட்ரீம் சோட்டாக்கன் கராத்தே கழகத்தின் பாடசாலை மாணவிகள் தேசியப் போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர்

விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பாடசாலை மட்ட மாகாண போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் கராத்தே போட்டி நேற்று ஞாயிற்று கிழமைதென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக எக்ஸ்ட்ரீம் சோட்டாக்கன் விளையாட்டுக் கழகமும் அதன் பிரதான போதனாசிரியர் எஸ். சுகிதன் மற்றும் ஆசிரியர் ஜே. கிருஷ்ணா , ம.மதன்ராஜ் அவர்கள் ஊடாக போட்டிக்கு பயிற்சிக்கப்பட்டு தயார் படுத்தப்பட்டு போட்டியின் வெற்றி பெற்று இறுதித்தெரிவில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை 7 மாணவிகள் தேசியப் போட்டிக்கு பங்குகொள்ளும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

 கிழக்கு மாகாண பாடசாலை மட்ட கராத்தே போட்டி