
கிழக்கு மாகாண பாடசாலைகளை வாரத்தில் மூன்று நாட்கள் நடாத்த தீர்மானம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பலமான அழுத்தின் காரணமாக, கிழக்கு மாகாணத்திலும் பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் நடாத்துவதாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள பிள்ளைகளின் கல்வியைத் தொடரும் நோக்கில் வாரத்தில் ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடாத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.
எமது பிள்ளைகளின் எதிர்காலத்திக்காக கடினமாக உழைக்க வேண்டிய தருணம் இது.
இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை வாரத்தில் மூன்று நாட்கள் நடத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
