கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் அனைத்து மாகாணங்களிலும் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு அந்நந்த மாகாண ஆளுநர்கள் விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறையை கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

அதற்கு பதில் பாடசாலை 18ம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்