கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது கடந்த புதன் கிழமை திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இத்திட்டமானது “பாடசாலை கைத்தொழில் தொழில் முயற்சியாளர் வட்டம்” என்ற தேசிய அளவிலான திட்டமாகும். கைத்தொழில் அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் கல்வி அமைச்சு ஆகிய மூன்றும் இணைந்து இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையானது இந்த திட்டத்தை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வானது கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஆசிரியர்களுக்கான முழு நாள் செயலமர்வாக நடாத்தப்பட்டது.

செயலுருவிலான தொழில் முயற்சியாண்மை, திட்ட அறிமுகம், கைத்தொழில் முயற்சியாண்மை வட்ட நடவடிக்கைகள் தொடர்பான விளக்கம், போட்டி நிகழ்ச்சிகள் தொடர்பான விளக்கம் போன்ற பல விடயங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை துறை சார் அதிகாரிகள், துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள், மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்