கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராக ஏ.பி.மதனவாசன் பதவியேற்பு
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராக ஏ.பி.மதனவாசன் கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் பிரதம செயலாலர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
இந் நிகழ்வில் ஆளுநரது செயலாளர், பொதுச்செவை ஆணைக்குழுவின் செயலாளர், மாகாண திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் சுற்றுலா அதிகாரசபையின் கீழ் இயங்கிவரும் பொது அமைப்புக்களது அங்கத்தவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதனையடுத்து தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் ஏ.பி.மதன்
கிழக்கில் முடங்கிக் கிடக்கும் சுற்றுலாாத்துறையை மீளக்கட்டியெழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தாம் தயாராக இருப்பதாகவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் விதத்தில் பாரிய கலாச்சார இடங்களை பிரபல்யப்படுத்தி அதனூடாக வெளிநாட்டவர்களை பாரிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக ஆயுர்வேத வைத்திய நிலையங்களை நிறுவி அதனூடாக சுற்றுலாத்துறையினை விருத்திசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்