
கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கான பிரியாவிடை நிகழ்வு
-மட்டக்களப்பு நிருபர்-
கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தரும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான வி. ஈஸ்பரனுக்கான பிரியாவிடை நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் தலைமையில் இன்று புதன்கிழமை இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தரும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமாகக் கடமையாற்றும் வி. ஈஸ்பரன் தனது அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களினால் இந் நிகழ்வு ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது.
சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலை மறைகாயாகக் காணப்பட்ட பல வீர, வீராங்கனைகளை மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான ஊடகமாகச் செயற்பட்டார்.
இவருடைய சேவைக் காலத்தில் கிழக்கு மாகாண வீரர்கள் பல துறைகளில் விருதுகளைச் சுபீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது விளையாட்டு உத்தியோகத்தர்களினால் அனுபவப் பகிர்வு மேற்கொள்ளப்பட்டதுடன் சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
