
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுமக்களது சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் பொதுமக்களது சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் இன்று நடாத்தப்பட்டது.
இதன்போது மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களும், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் உதவிக்கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் சேவைகளை தடையின்றி கிராம மட்டத்தில் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்நிகழ்வுகள் கிழக்கு மாகாணம் முழுவதும் நடாத்தப்படவுள்ளது.
பொதுமக்களை ஒன்றுதிரட்டியும் வீடு வீடாகச் சென்றும் இவ்விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் யூ.சிவராசா, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.இரங்கநாதன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








