கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி திணைக்களத்தால் பட்டிப்பொங்கல்

கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் திருகோணமலை பட்டினமும் சூழலும் கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட அரச கால் நடை வைத்தியர் Dr.நர்மதா குமுதன் மற்றும் பண்ணையாளர்களின் ஏற்பாட்டில் பட்டிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக உப்பு வெளி கால்டை வைத்திய அலுவல வளாகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன , கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்க மாகாண பணிப்பாளர் Dr.சுல்பிகார் அபூபக்கர், பிரதிப்பணிப்பாளர் Dr. நெளசாத் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திரு.மதிவண்ணன், உப்பு வெளி பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. சமிந்த ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டனர்.

இது தவிர கால்நடை உற்பத்தி சுகாதர திணைக்களத்தின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பண்ணையாளர்கள் பலரும் கலந்து கொண்டார்.

திருகோணமலையில் கால்நடை பண்ணையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பட்டிப் பொங்கல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.