கிழக்கு மாகாண ஆளுநருடன் தௌபீக் எம்.பி கலந்துரையாடல்!

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண அபிவிருத்தி, பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றக்கூடிய  ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவரை மக்கள் முழுமையாக ஆதரிப்பதாவும் பாராளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இச்சந்திப்பில்,  கிழக்கு மாகாண அபிவிருத்தி, மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை,  காணிப் பிரச்சினை, வெளிநாட்டு முதலீடுகள் சம்மந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் கலந்துகொண்டனர்.