கிழக்கு மாகாண ஆளுநரால் புதிய நியமனம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் (PPSC) நிரந்தர செயலாளராகவும், கிழக்கு மாகாண சபையின் பேரவை (Assembly) பதில் செயலாளராகவும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான ஆதம்பாவா மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.