கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளரானார் நஸீர், ஜே.லியாக்கத் அலி

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக எம்.எம்.நஸீர் தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கடந்த 06ஆம் திகதி மாகாண அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களை நியமித்து அவர்களுக்கான கடிதங்களையும் வழங்கி வைத்தார்.

இதன் போது, இலங்கை நிர்வாக சேவையில் விஷேட தரத்தைச்சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியான எம்.எம்.நஸீருக்கு வீதி அபிவிருத்தியமைச்சின் செயலாளருக்கான கடிதத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களென பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்