கிழக்கு மாகாணத்தில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும்.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
