கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி !

மட்டக்களப்பு மாவட்டம் மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று, மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.

மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவட்டவான், செறுவாமுனை கிராமத்தில் வசிக்கும் அபிரிஜா, பிறைசூடி மற்றும் கிரிஜா தம்பதியினரின் புதல்வியாவார்