கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடல்
-மூதூர் நிருபர்-
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் தமிழ் பேசும் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான வலயமைப்புக் கலந்துரையாடல் திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவங்களைச் சேர்ந்த நில அபகரிப்புக்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டங்களில் இக்கலரையாடல் இடம் பெற விருப்பத்துடன் ஏனைய மாகாணங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களிடமும் அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்றிட்டம் அகம் மனிதாபிமான வள நிலையம் , சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நிலத்திற்காக ஒருங்கிணைவோம் எனும் செயல் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வானது நடாத்தபட்டமை குறிப்பிடத்தக்கது






