கிழக்கு பல்கலைக்கழக மாணவியின் தவறான முடிவு

மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ஆம் வருடத்திற்கான பல்கலைக்கழக கல்வியினை தொடர்ந்துவந்த 22 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியை பூர்விகமாக கொண்டதுடன் கண்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து தொடர்ந்து வந்த நிலையிலையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவியின் தவறான முடிவு

கிழக்கு பல்கலைக்கழக மாணவியின் தவறான முடிவு