கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும், வடமாகாண ஆளுநராக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்