கிழக்கு உட்பட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் சில நாட்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.