கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை
கிழக்கு , வடக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தப் பகுதிகளில் சுமார் 75 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.